பன்னீர்: பட்ஜெட்டில் நதிநீர் இணைப்புத் திட்டம் வேண்டும்

பன்னீர்: பட்ஜெட்டில் நதிநீர் இணைப்புத் திட்டம் வேண்டும்

1 mins read

சென்னை: புதுடெல்லியில் புதிய வரவுசெலவுத் திட்டத்துக்கு முந்தைய கூட்டம் மாநில நிதி அமைச்சர்களுடன் நடந்தது. கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை மத்திய வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கவேண்டும் என தமிழக துணை முதல்வர் பன்னீர்செல் வம் மத்திய அரசுக்கு அக்கூட் டத்தில் கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத் துவமனை அமைக்க புதிய வரவு செலவுத்திட்டத்தில் உருப்படி யான முடிவுகள் இடம்பெறவேண் டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.