சென்னை: தமிழகத்தில் மாமல்ல புரம் அருகே முதன்முறையாக ஏப்ரல் 11=14 வரை ராணுவக் கண்காட்சி நடக்கும் என்றும் அதில் 80 நாடுகள் பங்கேற்கும் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பாதுகாப்புத் துறை கண்காட் சியை நடத்த மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்குச் சொந்த மான நிலத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது. பாதுகாப்புத் துறைக்குத் தேவை யான சாதனத் தயாரிப்பில், தனி யார் முதலீட்டாளர்களை ஊக்கு விக்கும் நோக்கத்தில் சென்னை யில் வியாழக்கிழமை பாதுகாப்புத் தொழில் மேம்பாட்டுக் கூட்டம் மற்றும் கண்காட்சி தொடங்கியது.
அதில் பாதுகாப்புத் தொழில் துறை முதலீட்டாளர் பிரிவைத் தொடங்கிவைத்துப் பேசிய அமைச் சர் நிர்மலா, பிரதமர் அறிவித்த 'மேக் இன் இந்தியா' திட்டத்தை, பாதுகாப்புத் துறையிலும் அரசாங் கம் அமல்படுத்தப்போவதாகக் குறிப்பிட்டார். "நாட்டிற்குத் தேவையானவற்றை நாமே தயாரிக்க வேண்டும். நம் தயாரிப்புப் பொருட்கள் ஏற்றுமதி யாகவும் வேண்டும். இதுவே பிரதமர் மோடியின் கனவு," என் றும் அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் கண்காட்சியில் 80 நாடுகள் பங்கேற்கும். போர்க்கப்பல்களும் காட்சியில் இடம்பெறும். சிறு தொழில் நிறுவனங்கள், தங்கள் பொருட்களைக் காட்சிக்கு வைக்க, தள்ளுபடி கட்டணத்தில் கூடங்கள் வாடகைக்குக் கொடுக் கப்படும் என்றும் அமைச்சர் குறிப் பிட்டார்.2

