சென்னை: ஆண்டாள் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத் தில் தன் பக்கம் நியாயம் இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இவ்விவகாரத்தில் தாம் ஏற்கெனவே வருத்தம் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்குமேல் தம்மால் என்ன செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். "ஆண்டாளை அவதூறாகப் பேசவேண்டும் என்று நான் நினைத் திருந்தால் அவரது பிறந்த ஊரான ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்றா எனது சொற்பொழிவை ஆற்றியிருப்பேன்? நான் கற்ற தமிழ் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு ஆண்டாள் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்ட நினைத்தேன். ஆண்டாள் எனது தாயைப் போன்றவர். அவரை நானே சிறுமைப்படுத்துவேனா? ஆண்டாளின் படைப்புகளை முதல்முறையாக பகுத்தறிவுவாதி யாகிய நான் பாராட்டியுள்ளேன். எனது பணிக்கு நான் உண்மை யாக உள்ளேன்," என பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து: நியாயம் என் பக்கம்
1 mins read

