தமிழகக் கோவில்களில் 1,262 சிலைகள் மாயம்

தமிழகக் கோவில்களில் 1,262 சிலைகள் மாயம்

1 mins read

சென்னை: தமிழகக் கோவில்களில் இருந்து பழமை வாய்ந்த 1,262 சிலைகள் மாயமாகி இருப்பதாக தமிழக ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 391 கற்சிலைகளும் 871 உலோக சிலைகளும் காணா மல் போய் இருப்பதாக அச்செய்தி தெரிவிக்கிறது. அவற்றுள் தற் போது வரை 5 கற்சிலைகள், 56 உலோக சிலைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பா லான கோவில்கள் இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அத்துறை கவனித்து வரும் சுமார் 38,529 கோவில்களில் லட்சக்கணக்கான சிலைகள் உள்ளன. பழமை வாய்ந்த அந்தக் கற் சிலைகள், ஐம்பொன் சிலைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட் டது.

இதில் அனைத்து கோவில்க ளிலும் சுமார் 4.3 லட்சம் சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், பாதுகாப்பு சரியாக இல்லாத 409 கோவில்க ளில் இருந்து 1,262 சிலைகள் காணாமல் போய்விட்டன என்று அறநிலையத்துறை அதிகாரி கூறி யதாக தமிழக ஊடகம் தெரிவித் துள்ளது. அந்தச் சிலைகள் பெரும் மதிப்புள்ளவை என்றும், புகார் அளித்தும் கூட சிலைகளை மீட்க போலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியதாக தமிழக ஊட கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.