கிருஷ்ணகிரி: திருமணமான ஒரு வாரத்துக்குள் தன்னைக் கை விட்டு இரண்டாவது திருமணம் புரிந்த கணவருக்கு எதிராக இளம் பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் போச்சம்பள்ளி பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் மஞ்சு. 26 வயதான இவரும் பேறுஅள்ளியைச் சேர்ந்த 26 வய தான பவித்ரன் என்பவரும் கடந்த ஆறு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். மஞ்சு பெட்ரோல் நிலை யத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி அன்று காதலர்கள் இரு வீட்டாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இது குறித்து தகவலறிந்த பவித்ரனின் குடும்பத் தார் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து மணமக்களைச் சந்தித்துப் பேசிய பின்னர்,
பவித் ரனின் குடும்பத்தார அவரை தங்க ளுடன் அழைத்துச் சென்றுவிட் டனர். பதறிப்போன மஞ்சு, காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால் அதன் பேரில் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார் மஞ்சு. இந் நிலையில் பவித்ரனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. கணவர் பவித்ரனுக்கு முன் னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் போச்சம்பள்ளியில் இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாகக் கேள்விப்பட்ட மஞ்சு அங்கு விரைந்தார்.
நேற்று முன் தினம் கே.பி.முனுசாமி வராததால் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் குமார் தலைமையில் பவித்ரனின் இரண்டாவது திருமணம் நடந்தேறியது. இதை மஞ்சுவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர் திருமண மண்டபத்துக்குச் சென்ற போது மணமக்கள் அங்கு இல்லை. பவித்ரனின் உறவினர்கள் சிலர் மட்டுமே இருந்தனர். இதனால் கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த மஞ்சு, திரு மண மண்டபத்துக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து விரைந்து வந்து போலிசார் அவரை சமாதானப் படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பவித்ரன் மீது போலிசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக மஞ்சு குற்றம்சாட்டி உள்ளார்.
சாலை மறியலில் ஈடுபட்ட மஞ்சு. படம்: தகவல் ஊடகம்

