நானும் சசிகலாவும் மட்டுமே அரசியலில் உள்ளோம் - தினகரன்

நானும் சசிகலாவும் மட்டுமே அரசியலில் உள்ளோம் - தினகரன்

3 mins read

சென்னை: தங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை சசிகலாவும் தானும் மட்டுமே அரசியலில் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தங்கள் குடும்பத்தைச் சார்ந்த மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை அதிமுகவின் கருத்தாக கருதக் கூடாது என்றார். ஜெயலலிதா மரணம் தொடர் பாக பிறர் தெரிவிக்கும் தகவல்கள் குறித்து தாம் கருத்து ஏதும் தெரி விக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதிமுக அம்மா அணி என்ற பெயர் கிடைக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும் என்றார். தினகரன் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த தையடுத்து, அவரது ஆதரவாளர் கள் மத்தியில் சலசலப்பு நிலவு கிறது. தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சில தீவிர ஆதரவாளர் களும் கூட தினகரன் மீது அதி ருப்தியில் இருப்பதாகக் கூறப்படு கிறது. ஆனால் தினகரன் இதைப் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதா மர ணம் தொடர்பான கருத்துகளை தெரிவிப்பதால் தினகரனையும் திவாகரனையும் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக் குமார் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள் விக்குப் பதிலளித்த அவர், கோமாளிகளுக்குப் பதிலளித்து நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை என்றார்.

"எங்கள் குடும்பத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். எனினும் பொதுச் செயலாளரும், அவரால் நியமிக்கப்பட்ட நானும் மட்டுமே அரசியலில் இருக்கிறோம். மற்ற வர்கள் சொல்வது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும். திவாகரனுக்கு கட்சியில் பொறுப்பு எதுவுமில்லை. அவர் எனது மாமா, அவ்வளவுதான்," என்றார் தினகரன்.

காளையை அடக்கினால் இளம்பெண் பரிசு: சமூக வலைத்தளத்தில் வதந்தி திருச்சி: ஜல்லிக்கட்டு காளையை அடக்கினால் குறிப்பிட்ட இளம் பெண்ணை திருமணம் செய்யலாம் என்று விஷமிகள் சிலர் பரப்பிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவர் தன் வீட் டில் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறார். இவரது மகள் அந்தக் காளையை ஜல்லிக் கட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்றபோது யாரோ புகைப்படம் எடுத்துள்ளனர். இந்நிலையில், சில தினங்க ளுக்கு முன்னர் வையம்பட்டி சந் தையில் முதியவர் ஒருவர் தண் டோரா மூலம் ஒரு தகவலை அறி வித்தார். "அணைக்கரப்பட்டியில் நடை பெறும் ஜல்லிக்கட்டில் சேலத்தைச் சேர்ந்த இளம்பெண் காளையுடன் வந்து பங்கேற்கிறார்.

அந்தக் காளையை அடக்குபவருக்கு இளம்பெண்ணைத் திருமணம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும்," என்று தண்டோராவில் அறிவிக் கப்பட்டது. இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள். இந்நிலையில், முதியவர் தண் டோரா போடும் படத்தையும் இளம் பெண் காளையுடன் நடந்துவரும் படத்தையும் இணைத்து சமூக ஊடகங்களில் காணொளிப் பதிவு ஒன்று வெளியானது. அதில் தண் டோராவில் குறிப்பிடப்பட்ட இளம் பெண் இவர்தான் என்று தெரி விக்கப்பட்டிருந்தது. தனது மகளின் புகைப்படம் இவ்வாறு பயன்படுத்தப்பட்டதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜன், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். "சமூக வலைத்தளங்களில் என் மகள் குறித்து அவதூறு பரப்புகின்றனர். என் மகளின் புகைப்படத்தை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்," என கோவிந்தராஜன் வலி யுறுத்தி உள்ளார். இதுகுறித்து விசாரணை நடை பெற்று வருகிறது.