பழனிசாமி: பலரும் பகல் கனவு காண்கிறார்கள்

பழனிசாமி: பலரும் பகல் கனவு காண்கிறார்கள்

1 mins read

சென்னை: எம்ஜிஆரை வைத்து அரசியல் செய்வது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று முதல்வர் பழனிசாமி கூறினார். சென்னையில் நடை பெற்ற எம்ஜிஆர் நூற் றாண்டு விழாவில் பேசிய அவர், உழைப்பால் மட்டுமே ஒருவர் மக்கள் மனதில் இடம்பெற முடியும் என்றார். தமிழகத்தில் அரசிய லுக்கு வருவதாக கூறுபவர் கள் பகல் கனவு காண்ப தாக விமர்சித்த முதல்வர், அவர்களது கனவு நிறைவேறாது என்றார். "தமிழகத்தில் எத்த னையோ பேர் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி வருகிறார்கள்.

அவர்க ளெல்லாம் மக்களைப் பார்த் தார்களா? மக்களின் துன் பத்தைப் போக்க உதவினார் களா? என்றால் எதுவுமே செய்யவில்லை. அவர்கள் வெறும் கனவு காண் கிறார்கள். "நல்ல திட்டங்களால், செய்த நன்மைகளால் மட் டுமே மக்கள் மனதில் ஒரு வர் நிலைத்து நிற்க முடி யும். இதை எம்ஜிஆரால் சாதிக்க முடிந்தது," என் றார் முதல்வர் பழனிசாமி. சிலர் குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பார் கள் என்றும் தனது குடும் பத்தார் மட்டுமே அதிகாரத் துக்கு வரவேண்டும் என சுயநலமாக சிந்திப்பார்கள் என்றும் அவர் சாடினார்.