உலகளவில் கடந்த ஆண்டு திரட்டப்பட்ட ஒட்டுமொத்த சொத் துகளில் 82 விழுக்காடு பெரும் பணக்காரர்களாக உள்ள ஒரு விழுக்காட்டுப் பேரிடம் உள்ளது.
அதேவேளை ஏழைக்கும் ஏழை யாக உள்ள பாதிப்பேரிடம் அதா வது 3.7 பில்லியன் மக்களுக்கு சொத்து என்று எதுவும் கடந்த ஆண்டு கிடைக்கவில்லை. ஆக்ஸ்ஃபேம் என்னும் அற நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் இது தெரிய வந்துள்ளது. உலகப் பொருளியல் கருத்தரங்கிற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நக ரில் உலகத் தலைவர்கள் கூட தயாராகிவரும் வேளையில் அந்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப் பட்டது.
சாதாரணத் தொழிலாளியைக் காட்டிலும் உலகப் பணக்காரர் களின் சொத்து கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஆறு மடங்கு பெருகிவிட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
உலக நிலவரம் இவ்வாறிருக்க இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் ஈட்டப்பட்ட சொத்து களில் 73 விழுக்காடு வெறும் ஒரு விழுக்காட்டு கோடீஸ்வரர்கள் வசம் இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. 2016ஆம் ஆண் டில் உருவான சொத்துகளில் 58 விழுக்காட்டை மட்டுமே ஒரு விழுக்காட்டுப் பெரும்பணக்காரர் கள் வைத்திருந்தார்கள். இந்த விகிதம் கடந்த ஆண்டில் கூடி விட்டது. புதிதாக பல கோடீஸ் வரர்கள் உருவாகி இருப்பதையே இது காட்டுகிறது.
பல பில்லியன் ரூபாய் மதிப் புள்ள சொத்துகளுக்குச் சொந்தக் காரர்களாக 84 பேர் மட்டுமே இருந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 101 ஆக உயர்ந்தது.

