தை மாதம் பிறந்ததும் தமிழகத் தில் ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக் கம். முறையான திருமணங் களோடு சட்டவிரோத திருமணங் களும் தை மாதத்தில் அதிமாக நடப்பது உண்டு. தை பிறந்து பத்து நாள்கூட முடியாத நிலையில் எட்டு சட்ட விரோத குழந்தைத் திருமணங் களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாத இடையில் தை பிறந்தது முதல் ஜனவரி இறுதிவரை 12 குழந்தைத் திருமணங்கள் அவை நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு முழுவதும் தமிழகம் முழுவதும் பரவலாக 69 குழந்தைத் திருமணங்களை அதிகாரிகள் நடக்கவிடாமல் செய் தனர். அச்சம்பவங்கள் தொடர் பில் பலர் கைது செய்யப்பட்டுள்ள னர். ஆக அண்மையில் தடுத்து நிறுத்தப்பட்ட திருமணத்தில் ஒன் பது வயது சிறுமி மணமகளாக அலங்கரிக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்தது. கடந்த வியாழக்கிழமை திருச்சி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வழியாக அழைத்து குழந்தை திருமணம் நடக்கவிருப் பது குறித்த தகவல் ஒன்றை கொடுத்துள்ளார்.

