கோவை: மிகப் பெரிய அரச மரம் ஒன்றை மறுநடவு செய்து கோவை மாநகர மக்களும் காவல்துறையின ரும் அதன் வாழ்வை காத்துள்ளனர். கோவையில் சாலை விரிவாக் கம், புதிய கட்டுமானங்கள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற் காக பல்வேறு இடங்களில் மரங் கள் வெட்டப்படுகின்றன. இதனால் கவலை அடைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வெட்டப்பட வேண்டிய மரங்களை, வேரோடு பெயர்த்தெடுத்து, மறு நடவு செய்யும் நல்ல காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஏராளமான மரங்களுக்கு மறுவாழ்வு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இடையர்பாளை யம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மேற் கொள்ளப்படும் கட்டுமானப் பணிக்காக பிரம்மாண்டமான அரச மரம் வெட்டப்பட இருந்தது. அந்த மரத்துக்கு 35 வயது ஆகிறது என்பதுடன் பத்து டன் எடையும் கொண்டதாகும். இது குறித்து தகவலறிந்த 'ஓசை' என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு வெட்டப்பட இருந்த மரத்தைக் காப்பாற்ற முடிவு செய்தது. சுற்றுச்சூழல் நிபுணர்கள் அம்மரத்தை ஆய்வு செய்து, அதை வேறு இடத்தில் மறுநடவு செய்ய முடியும் என தெரிவித்தனர்.
இதையடுத்து 42 அடி உயரமுள்ள அந்த பிரம்மாண்ட அரச மரம் மொத்தமாக பெயர்த் தெடுக்கப்பட்டது. பின்னர் ராட்சத சரக்கு லாரியில் ஏற்றப்பட்டு ஏறத் தாழ 12 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் நீதிபதிகள் அகாடமி வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வெற்றிகரமாக மறுநடவு செய்யப்பட்ட நிலையில், இத்தகைய மரங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டவை என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரி வித்துள்ளனர்.
மறுநடவுக்காகக் கொண்டு செல்லப்பட்ட மரம். படம்: தகவல் ஊடகம்

