தமிழக அரசாங்கத்தில் லஞ்ச ஊழல் பெருத்துவிட்டதால் பாஜக கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜெய லலிதா இறந்த பின்னர் இப்போ தைய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விரும்பியபோதெல்லாம் டெல்லிக்கு ஓடிச்சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து வந்தார். மோடியும் அவரது சந்திப்புக்குப் பச்சைக்கொடி காட்டிவந்தார்.
ஆனால் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதித் துறைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற ஓபிஎஸ்ஸுக்கு பிரதமரைச் சந்திக்க அனுமதி தரப்படவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் ஏமாற்றத்துடன் தமிழகம் திரும் பினார் என்று தமிழக நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்குப் பின்னர் மத்திய அரசின் நேரடி வழிகாட்டு தலின் பேரில் தமிழக அரசைக் கையாள வேண்டும் என்றும் அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கணக்குப் போட்டி ருந்தார்.
ஆனால், அதிமுக தலைமை யில் பிளவும் குழப்பமும் ஏற்பட்ட தன் விளைவாக அரசின் செயல் பாடு முடங்கிப்போய்விட்டது. அத னால் அதிமுக தலைவர்களிடம் பாராமுகப் போக்கை ஒட்டுமொத்த பாஜகவும் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில், அரசியல் ரீதி யாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில் விரிசல் அதிகரித்து வருவதாக 'தி இந்து' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. ரஜினியின் அர சியல் பிரவேச அறிவிப்பு, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அடைந்த தோல்வி, அதே தேர்த லில் நோட்டாவை விட பாஜகவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்தது ஆகியவற்றின் அடிப்படையில் இரு கட்சிகளும் வெவ்வேறு பாதை யில் பயணம் செய்யத் தொடங்கி இருப்பதாக அச்செய்தி குறிப்பிடு கிறது.
முதல்வர் எடப்பாடி பழனி சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருடன் சேர்ந்து பயணம் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்த பாஜக, இப்போது ரஜினிகாந்தின் மீது பார்வையைத் திருப்பி உள்ள தாகக் கூறப்படுகிறது.
மோடியுடன் ஓபிஎஸ். கோப்புப் படம்

