சங்கிலி பறிப்பு திருடர்கள் கைது

சங்கிலி பறிப்பு திருடர்கள் கைது

1 mins read

சென்னை: சங்கிலி பறிப்பு திருடர்கள் இருவரை போலிசார் நீண்ட தூரம் விரட்டிச் சென்று கைது செய்துள்ளனர். தனுஷ், சிவா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் காலை அண்ணா நகரில் ஒருவரிடம் சங்கிலி பறிக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் இருவருக்கும் உடல் முழுவதும் சிராய்ப்பு ஏற்பட்டது.

அங்கிருந்து தப்பிய இருவரும் சிறிது தூரம் சென்றபோது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பயந்து போன இருவரும், வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றனர். இதையடுத்து அவர்களை பல கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர் போலிசார். இருவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.