சாலையோர வீட்டுக்குள் புகுந்த பேருந்து: ஓட்டுநர் பரிதாப பலி

சாலையோர வீட்டுக்குள் புகுந்த பேருந்து: ஓட்டுநர் பரிதாப பலி

1 mins read

திருச்சி: லாரி மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரம் அமைந்துள்ள வீட்டுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் திருச்சி அருகே உள்ள செவந்தியான் பட்டியில் இவ்விபத்து நிகழ்ந்தது. செவ்வாய்க்கிழமை காலை 7 மணியள வில் கணபதி என்பவரின் வீட்டுக்குள் அரசுப் பேருந்து வேக மாக மோதி உள்ளே புகுந்தது. அச்சமயம் கணபதி குடும்பத் தார் யாரும் வீட்டில் இல்லை. எனினும் இடிபாடுகளில் சிக்கிய பேருந்து ஓட்டுநர் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.