சென்னை: மாவட்ட செயலர்கள் குறித்த புகார்கள், மனக்குறை களைக் கட்சித் தலைமையிடம் தெரிவிப்பதற்கு வசதியாக நிர் வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தின்போது புகார் பெட்டி ஒன்று வைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகிகளின் கருத்துகளை வைத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை திமுக நிர்வாகிகளுடன் மாவட்ட வாரி யாக ஆலோசனை நடத்த உள்ளார் மு.க.ஸ்டாலின். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புகார் பெட்டி குறித்த அவரது அறிவிப்பு மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்ப டுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
"பொதுத்தேர்தலின் போது வாக்குப் பெட்டியில் சேரும் வாக்கு கள் எப்படி தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றனவோ, அதுபோல புகார் பெட்டியில் போடப்படும் கடிதங்களில் உள்ள கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். "கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான, ஆக்கபூர்வமான செயல்பாடுகளையும் அவசிய மாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன்," என ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள் ளார். இதற்கிடையே, திமுக பொருளாளர் பதவி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் விடு விக்கப்பட்டதை அடுத்து கனி மொழியும் அப்பதவிக்கு குறி வைத்துள்ளார். இந்நிலையில் ராசாவுக்கு அந்தப் பதவியைப் பெறுவதில் ஆர்வம் இருப்பதாக வும் மு.க.ஸ்டாலின் இது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதா கவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

