யாழ், மலேசிய நூலகங்களுக்காக திரட்டப்பட்ட 20 ஆயிரம் புத்தகங்கள்

1 mins read

சென்னை: யாழ்ப்பாணம், மலேசிய நூலகங்களுக்கு அளிப்பதற் காக சென்னை புத்தகக் காட்சியின் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் திரட்டப்பட்டுள்ளன. இத்தகவலை செய்தி யாளர்களிடம் தெரிவித்த தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன், செய லாளர் வெங்கடாச்சலம் ஆகியோர், இப்புத்தகங்கள் அனைத்தும் பொது நூலகத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர். "நூலகத்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க, பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள நூல்களின் இரண்டிரண்டு படிகளாக புத்தகக் காட்சியில் ஒரே இடத்தில் திரட்டப்பட்டன. நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சிக்கு 13 லட்சம் பேர் வந்துள்ளனர்," என்றும் அவர்கள் தெரிவித்தனர்.