வாழைப்பழம் வாங்கி வராததால் மோதல்: ரவுடி வெட்டிக் கொலை

வாழைப்பழம் வாங்கி வராததால் மோதல்: ரவுடி வெட்டிக் கொலை

2 mins read

நெல்லை: வாழைப்பழம் வாங்கி வராத நண்பரை மது போதையில் தாக்கிய பிரபல ரவுடியை மற்ற நண்பர்கள் வெட்டிக் கொன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதாகி உள்ளார். மேலும் 8 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. பா ளை ய ங் கோ ட் டை யை ச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். அப்பகுதி யில் ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தும் இவர், கடந்த 21ஆம் தேதியும் மது அருந்தி உள்ளார்.

அப்போது தன் நண்பரிடம் வாழைப்பழம் வாங்கி வருமாறு ஆனந்தராஜ் கூற, அந்த நண்பர் வாங்கி வரவில்லை எனத் தெரி கிறது. இதனால் கோபத்தில் அந்த நண்பரை அடித்துள்ளார். நண்பர்க ளுக்குள் இதனால் மோதல் வெடித் துள்ளது. ஆனந்தராஜை பழி வாங்குவது என நண்பர்கள் முடிவு செய்துள் ளனர். இதையடுத்து மறுநாள் தன் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அவரை வற்புறுத்தி மது அருந்த அழைத்துச் சென்றுள் ளனர். சீவலப்பேரி தடுப்பணைப் பகுதியில் ஒன்றுகூடி மது அருந் திய போது அவர்களுக்கிடையே மீண்டும் மோதல் மூண்டது. அப்போது நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஆனந்தராஜை சரமாரி யாகத் தாக்கியதுடன் அரிவாளால் வெட்டிக் கொன்றனர். கொலை செய்வதைத் தடுக்க முயன்ற ராஜா என்பவருக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

சடலத்தை ஆற்றுப் பகுதியி லேயே வீசியெறிந்துவிட்டு மற்றவர் கள் வீடு திரும்பிய நிலையில், ராஜா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார். போதையில் மயக்கம் அடைந்து விழுந்த அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் கண் விழித்த அவர், ஆனந்தராஜ் பிழைத்துக்கொண்டாரா எனக் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம டைந்த மருத்துவமனை ஊழியர்கள் போலிசுக்கு தகவல் தெரிவிக்க, விசாரணையில் ஆனந்தராஜ் கொல்லப்பட்டது அம்பலமானது.