புதுடெல்லி: இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது சிக்கிம். அம்மாநில முதல்வர் பவன் குமார் சாம்லிங் முயற்சியால், நவீன முறை விவசாயத்திற்கு மாற்றாகப் பாரம்பரிய விவசாய முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டாம் கட்ட இயற்கை விவசாயத்தை நோக்கி அம்மாநிலம் பயணத்தைத் தொடங்கியுள்ளது. எனவே ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு, வெளி மாநிலங்களில் இருந்து ரசாயனத்தைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் தானியங்கள் மற்றும் காய்கறிகளுக்கு சிக்கிமில் அனுமதியில்லை என முதல்வர் பவன் குமார் சாம்லிங் கூறியுள்ளார்.
சிக்கிம் மாநிலத்தி ரசாயன காய்கறிகளுக்கு அனுமதி மறுப்பு
1 mins read

