10 போலி அழைப்பு மையங்களை சேர்ந்த 33 பேர் கைது

10 போலி அழைப்பு மையங்களை சேர்ந்த 33 பேர் கைது

1 mins read

குர்கான்: அமெரிக்கர்கள், மற்ற வெளிநாட்டவர்களுக்குக் கடன் தருவதாகவும் அவர்கள் குலுக்கல் பரிசுச்சீட்டில் வென்றிருப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி பணம் பறித்த போலி அழைப்பு மையங் களைச் சேர்ந்த 33 ஏமாற்றுப் பேர் வழிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஹரியானா மாநிலம் குர்கானின் உத்யோக் விகார் பகுதியில் பல் வேறு கட்டடங்களில் இந்த போலி அழைப்பு மையங்கள் செயல்பட்டு வந்தன. குர்கானில் செயல்படும் பன் னாட்டு நிறுவனம் ஒன்றின் வெளி நாட்டு வாடிக்கையாளர் ஒருவர் மோசடி தொடர்பாக புகார் அளித் திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், மேற்கொண்ட விசாரணையின் போது அதே பகுதியில் செயல்பட்டு வந்த போலி அழைப்பு மையங்கள் பற்றி போலிசாருக்குத் தெரிய வந் தது. அதைத் தொடர்ந்து திங்கட் கிழமை இரவு மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, மேலாளர்கள், குழுத் தலைவர்கள் என 33 பேரை போலிசார் கைது செய்தனர். இந்தியா, வெளிநாட்டு நபர் களைத் தொடர்பு கொண்டு அவர் களுக்கு குலுக்கல் பரிசுச்சீட்டில் பணம் விழுந்திருப்பதாகவோ, கடன் தருவதாகவோ, வருமான வரித் துறையினர் போன்றோ பேசி அவர்களிடம் இருந்து பணம் பறித் ததாகக் கைதானவர்கள் கூறிய தாக போலிசார் தெரிவித்தனர்.

"இவர்களுக்கு எதிராக ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. மேலும் இவர்களி டையே 'ஐடியூன்ஸ்' அட்டைகள் மூலம் பணம் பெறப்பட்டுள்ளது," என்றார் ஒரு போலிஸ் அதிகாரி.