சன்னல் கண்ணாடி தானாக இறங்கியது: கைவிரல் துண்டானது

சன்னல் கண்ணாடி தானாக இறங்கியது: கைவிரல் துண்டானது

1 mins read

சிவகங்கை: அரசுப் பேருந்து சரியாகப் பராமரிக்கப் படாததால் அதில் பயணம் செய்த ஆடவரின் கைவிரல் துண்டானதாக புகார் எழுந்துள்ளது. காளையார்கோவிலைச் சேர்ந்த சார்லஸ், முதுகுளத்தூருக்கு அரசுப் பேருந்தில் சென்றார். சன்னல் ஓரம் அமர்ந்திருந்த அவர், தன் கையை அதன் மீது வைத்திருந்தார். பரமக்குடி அருகே வந்த போது, அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியது பேருந்து. அப்போது சன்னலின் கண்ணாடிப் பகுதி திடீரென தானாகக் கீழே இறங்கியது. இதில் சன்னலில் கை வைத்திருந்த சார்லசின் ஆள்காட்டி விரல் துண்டானது.