தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டதாக விஜயேந்திரருக்கு தலைவர்கள் கடும் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டதாக விஜயேந்திரருக்கு தலைவர்கள் கடும் கண்டனம்

1 mins read
7f20d9ba-3c61-4a70-baee-5e94417ea687
-

சென்னை: காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் சென்னையில் நடைபெற்ற எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- = சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காதது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவருக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "தமிழ்த்தாய்க்கு மரியாதை செலுத்தாதவரை மன்னிக்கலாமா? தேசிய கீதத்திற்கு மட்டும் எழுந்து நின்ற விஜயேந்திரரை மன்னிக்கலாமா?" என்று திரைப் பட இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தள் ளாத வயதிலும் தமிழ்த்தாய்க்கு தந்தை பெரியார் மரியாதை செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். "கடவுள் எதிர்ப்பாளரான பெரி யார் கூட கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நின்றார். மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமதித்துள்ளார். தமிழுக்குத் தலைக்குனிவு ஏற்பட் டுள்ளது. வைரமுத்துவை அநாகரி கமாக பேசியவர்கள் இப்போது குரல் கொடுப்பீர்களா?" என்றும் பாரதி ராஜா கேட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மீது அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டு மென வலியுறுத்தியுள்ளார். 2018-01-26 06:00:00 +0800

முழுச் செய்தியையும் படிக்க தமிழ்முரசின் இ-பேப்பரை நாடுங்கள்: epaper.tamilmurasu.com.sg