குக்கர் சின்னம் கோரும் டிடிவி: ஓபிஎஸ், பழனிசாமிக்கு நோட்டீஸ்

குக்கர் சின்னம் கோரும் டிடிவி: ஓபிஎஸ், பழனிசாமிக்கு நோட்டீஸ்

1 mins read
adac8f29-77c1-45cd-b3da-9f755c101056
-

சென்னை: அதிமுக அம்மா அணி என்ற பெயரில் இயங்க அனுமதிக்கக் கோரி டிடிவி.தினக ரன் தாக்கல் செய்த மனு தொடர் பாக விளக்கம் கேட்டு தமிழக முதல்வர், துணை முதல்வருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.

தொடக்கத்தில் சசி கலா, தினகரன், எடப்பாடி பழனி சாமி ஆகியோர் அடங்கிய அணி தனியாகவும், பன்னீர்செல்வம் தலைமையிலான அணி தனியாக வும் செயல்பட்டு வந்தன. இதில் பன்னீர்செல்வம் அணியை அதி முக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும், சசிகலா அணியை, அதிமுக அம்மா அணி என்றும் அழைக்க வேண் டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் பழனிசாமி தரப்பும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. இதையடுத்து பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. சசிகலா தரப்பினரை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.