எனது பயணம் தேர்தலை மட்டுமே நோக்கிச் செல்வது அல்ல: உதயநிதி

எனது பயணம் தேர்தலை மட்டுமே நோக்கிச் செல்வது அல்ல: உதயநிதி

1 mins read
77975b5e-52b4-42f8-b8ba-943d5fc93a2e
-

சென்னை: தனது அரசியல் பயணம் தேர்தலை மட்டும் நோக்கிச் செல்லக்கூடியது அல்ல என்றும், திமுக தொண்டர்களுடன் ஒன்றாக நடைபோடுவதே தமது பயணத்தின் நோக்கம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித் துள்ளார். திமுக இளையரணி சார்பில் சென்னையில் நடைபெற்ற பொங் கல் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக அரசு நிதி பற்றாக்குறையால் தவிப்பதாகக் கூறினார்.

"நான் இந்த மேடையில் ஏறும் போதே ஒரு முடிவெடுத்து விட்டுத் தான் ஏறி இருக்கிறேன். நான் இங்கு நடிகராக வரவில்லை. பெருமையோடு சொல்ல வேண்டு மானால் தலைவர் கலைஞரின் பேரனாக வந்திருக்கிறேன். தள பதியின் மகனாக வந்திருக்கிறேன். "இன்னும் சொல்ல வேண்டும் என்றால் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு தொண்டனாக சந்திக்க வந்திருக்கிறேன்," என் றார் உதயநிதி ஸ்டாலின். விழா முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைமை வாய்ப்பு கொடுத் தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றார்.

பொங்கல் விழாவில் உதயநிதி. படம்: தகவல் ஊடகம்