கோபி: கோபி வாய்க்கால் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையில் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப் படுகிறது. இதனால் அந்த மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட் சியர், ஆர்டிஓ மற்றும் பல அதி காரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில் நேற்று குடியரசு தினத்தையொட்டி மதுக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கா ததைக் கண்டித்தும் அப் பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன் தேசிய கொடிக்குப் பதில் கறுப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
தேசிய கொடிக்குப் பதில் கறுப்புக் கொடி
1 mins read

