சென்னை: சென்னை கொளத் தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் குற்றவாளி நாது ராமைத் தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலி சார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12 அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை பிடிக்க முற்பட்ட போது ஆய்வாளர் பெரியபாண்டி யனை நாதுராம் (படம்) துப்பாக்கி யால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார் என கூறப்பட்டது.
ஆனால் பெரிய பாண்டியனை சுட்டது சக போலிஸ் அதிகாரி முனிசேகர் என்பது தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து ராஜஸ்தான் போலிசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய குற்ற வாளி நாதுராமை ஒரு மாதத்துக்கு மேலாக தேடிவந்தனர். இதற்கிடையே, நாதுராம் தனது பேஸ்புக்கில் கையில் துப்பாக்கி யுடன் இருந்த புகைப்படம் வெளி யானது. இதையடுத்து, ராஜஸ்தான் போலிசார் விரைந்து செயல்பட்டு நாதுராமை குஜராத்தில் கைது செய்தனர். அவரை தமிழக போலி சில் ஒப்படைக்க முடிவானது. இந்நிலையில், கொள்ளை குற்ற வாளியான நாதுராமை தனிப்படை போலிசார் ராஜஸ்தானில் இருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

