சென்னை: தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வைத் தொடர்ந்து சுமார் 25 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளைப் புறக்கணித் துள்ள விவரம் வெளியாகியுள்ளது. ரயில்கள் மற்றும் தனியார் பேருந்து களில் கூட்டம் அலைமோதுவதால் எதிர்பார்த்த வசூல் இல்லை என்று அரசுப் போக்குவரத்து அதிகாரி கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழக அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணம் 60 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இம்மாதம் 20ஆம் தேதி அந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந் தது.
பேருந்துக் கட்டண உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின் றனர். சமூக ஊடகங்களிலும் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தைப்போல் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்துக்கு சமூக ஆர்வ லர்கள் ஆதரவு திரட்டி வருகின் றனர்.
அரசு போக்குவரத்து கழகங் களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின் றன. அவற்றில் 70 விழுக்காட்டுப் பேருந்துகள் பழையதாகவும் பழு தடைந்த நிலையிலும் உள்ளன. அதனால் கூடுதல் கட்டணம் கொடுத்து அந்தப் பேருந்துகளில் பயணம் செய்வதைத் தவிர்த்து, ரயில்கள், தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் மக்கள் பயணம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

