மு.க.ஸ்டாலின்: களவாணிப் பசங்களா உங்களுக்கு திராணியைக்கொடுத்தது இந்த திராவிட மண்

மு.க.ஸ்டாலின்: களவாணிப் பசங்களா உங்களுக்கு திராணியைக்கொடுத்தது இந்த திராவிட மண்

1 mins read
27754c56-680a-4ae9-bac0-a726aa7b5811
-

கடலூர்: திமுக சார்பில் கடலூரில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திராவிட மண் குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கேலிப் பேச்சுகளுக்கு முதல் முறையாக ஆவேசமாகப் பதிலளித் தார்.

முற்றிலும் வித்தியாசமான அவரது சாடலுக்கு சமூக வலைத் தளங்களில் வரவேற்பு கிளம்பிய தோடு வேகமாகப் பரவியும் வரு கிறது. மதவாத எதிர்ப்பு சக்திகள் ஸ்டாலின் பேச்சை வரவேற்று வரு கின்றன. உணர்ச்சி மேலிட பேசிய மு.க. ஸ்டாலின், "தமிழ்த்தாய்க்கு தற் போது அவமானம் ஏற்பட்டுள்ளது. விஜயேந்திரர் வருத்தம் தெரி விக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப் போர் உருவாகும் நேரம் வந்துவிட் டது.

"சாதாரணமாக சொல்கிறார்கள் கழகங்கள் இல்லாத தமிழகமாம். ஏய் களவாணிப் பசங்களா, உங் களைப் பார்த்து நான் கேட்கிறேன்.

புறம்போக்காக இருக்கும் நீங்களே ஒரு மேடை போட்டு அதில் நின்று பேசக்கூடிய தெம்பை, திராணியைக் கொடுத்தது இந்த திராவிட மண். திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாது என்பதற்கு எத் தனையோ வரலாறு உள்ளது," என்று பேசினார்.