'தலித்' இளையராஜாவுக்கு விருது: மன்னிப்பு கேட்டது நாளிதழ்

'தலித்' இளையராஜாவுக்கு விருது: மன்னிப்பு கேட்டது நாளிதழ்

1 mins read
3ca628ed-9484-4981-85fb-b016158941c9
-

சென்னை: 'தலித்' என்பதற் காக இசையமைப்பாளர் இளைய ராஜாவுக்கு விருது வழங்கப் பட்டதாக செய்தி வெளியிட்ட தற்கு 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்திய குடியரசு தினத்தை யொட்டி இளையராஜாவிற்கு பத்மவிபூஷண் விருதை இந்திய அரசு அறிவித்தது. அது குறித்து நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின.

ஆங்கில நாளிதழான 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' தனது செய்தியில் இளைய ராஜாவை தலித் என்றும் அவர் தலித் என்பதற்காகவே பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதுபோலவும் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் பத்மவிபூஷண் விருதிற்கு இளையராஜா தேர்வு செய்யப்பட்டதையும் குஜராத்தில் ஜிக்னேஷ் மேவா னியின் சமூகநீதிப் போராட் டத்தையும் ஒப்பிட்டு அது செய்தி வெளியிட்டிருந்தது. அதனால் திரைப்பட பிர பலங்கள், அரசியல் தலைவர் கள், பத்திரிகையாளர்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் பலர் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இளையராஜாவை சாதி ரீதி யாகக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டு அந்த நாளிதழ் அறி விப்பு வெளியிட்டுள்ளது.