ஜோலார்பேட்டை: திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர சிங், 35, என்பவர் திருப்பதியிலிருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் பயணம் செய்தார். அந்த ரயில் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது மகேந்திர சிங் ரயில் பெட்டி மீது ஏறி நின்று மதுவைக் குடித்தவாறு நடனமாடினார்.
போலிசார் அவரை கீழே இறக்க முயன்றனர். ஆனால் 'அருகில் வந்தால் மது பாட்டிலால் குத்திவிடுவேன்' என அவர் மிரட்டி னார். அப்போது அங்கிருந்த மின்சாரக் கம்பி அவர் மீது பட்டதில் துக்கிவீசப்பட்டார். படுகாயமடைந்த மகேந்திர சிங் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

