சென்னை போலிஸை கைது செய்த திருச்சி போலிஸ்

சென்னை போலிஸை கைது செய்த திருச்சி போலிஸ்

1 mins read

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஓட்டல் ஒன்றில் கள்ளத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சென்னை போலிஸ்காரர் ஒருவரை திருச்சி போலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மற்றொரு ஓட்டலில் தங்கியிருந்த மேலும் இருவரை அவர்கள் கைது செய்தனர். பிடிபட்ட மூவரையும் போலிசார் இரவோடு இரவாக சென்னை கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின் றனர். கைது செய்யப்பட்ட போலிஸ்காரர் சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் பணிபுரியும் பரமேஸ்வரன் எனக் கூறப்படுகிறது.