எம்ஆர்ஐ இயந்திரம் விழுங்க முயன்றதில் ஆடவர் மரணம்; மூவர் கைது

எம்ஆர்ஐ இயந்திரம் விழுங்க முயன்றதில் ஆடவர் மரணம்; மூவர் கைது

1 mins read
daeaf9f8-726d-4046-b604-ca93ec529be2
-

பிராணவாயு சிலிண்டருடன் வந்த ஆடவரை எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் உள்ளே இழுத்ததில் அவர் மாண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் மும்பையிலுள்ள பிஒய்எல் நாயர் அறநிறுவன மருத்துவமனை யில் நிகழ்ந்தது.

பொதுவாக எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் இருக்கும் அறையில் உலோகப் பொருட்களை மருத்துவ மனைகள் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் ராஜேஷ் மாரு, 32, என்பவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் நாயர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தமது உறவினரின் சுவா சத்திற்காக பிராணவாயு உரு ளையைக் கொண்டு சென்றுள் ளார். மருத்துவரின் வருகைக்காக எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திர அறைக்கு வெளியே உறவினர்கள் காத்திருந்தனர்.

அப்போது அந்த அறைக்குள் பிராணவாயு உருளையைக் கொண்டு வருமாறு அங்கிருந்த ஊழியர் ஒருவர் ராஜே‌ஷிடம் கூறினார். அதன்படி அவர் உள்ளே நுழைந்தபோது எம்ஆர்ஐ இயந் திரத்தின் மிதமிஞ்சிய காந்த சக்தி யால்- உலோக உருளை ஈர்க்கப் பட்டதில் உருளையோடு ஆடவ ரும் இயந்திரத்துக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும், அவரது கைகள் வெளியே மாட்டியதால் அவரது உடல் முழுமையாக இயந்திரத் துவாரத்துக்குள் செல்லவில்லை. ஆனால், சிறிது நேரத்தில் ராஜேஷின் உடல் ஊதிப்பெருத்துவிட்ட தால் அவரை வெளியே இழுக்க இயலவில்லை என்று சோலன்கி என்னும் அவரது உறவினர் தெரி வித்தார்.

உயிரிழந்த ராஜேஷ் மாரு. படம்: ஃபேஸ்புக்