குறைந்த செலவில் வாழத் தகுதியான நாடு இந்தியா

குறைந்த செலவில் வாழத் தகுதியான நாடு இந்தியா

1 mins read

புதுடெல்லி: குறைந்த செலவில் வாழத்தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ஆம் இடம் பிடித்துள்ளது. 'கோ பங்கிங் ரேட்ஸ்' என்ற அமைப்பு 112 நாடுகளில் நடத்திய ஆய்வில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. வீட்டு வாடகை, மக்களின் நுகர்வுத்திறன், மிண் நுகர்வு, பொழுதுபோக்கு சாதனங்கள், பள்ளிப் படிப்பு, மருத்துவச் செலவு உள்ளிட்ட அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 14வது இடத்திலும் நேப்பாளம் 28ஆம் இடத்திலும் பங்களாதேஷ் 48வது இடத்திலும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.