உ.பி.யின் தமிழ் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது

உ.பி.யின் தமிழ் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறந்த காவல் பணிக்கான அரசு விருது

1 mins read
4092fb1a-6610-4ddd-9eb5-5369a46ad552
-

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணிபுரியும் தமிழரான ஜி.முனிராஜுக்கு சிறந்த காவல் பணிக்கான பாராட்டுப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று நாடு முழுவதிலும் சிறப்பாகப் பணி புரிந்த காவல் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசால் விருதுகள் வழங்கப்படுன்றன. அதில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜி.முனிராஜ் என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. ஜி.முனிராஜ் உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள புலந்த்ஷெளஹர் எனும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்று கிறார். அங்கு வழிப்பறி, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. அதனால் சிறந்த காவல் அதிகாரியாகப் பெயர் பெற்ற முனிராஜ் அங்கு பணியில் அமர்த்தப்பட்டார்.

அவர் பணியில் சேர்ந்தது முதல் 15 முறை அவர்மீது குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி தற்காப்பிற்காக முனிராஜ் திருப்பி சுட்டதில் இரண்டு குற்றவாளிகள் பலியாகி உள்ளனர். உ.பி. அரசால் பயங்கர குற்றவாளிகள் என்று வகைப்படுத்தப்பட்ட 54 பேரை முனிராஜ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்.

குடியரசு தினத்தன்று உயர் அதிகாரியிடமிருந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெறுகிறார் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ். படம்: இந்திய ஊடகம்