புதுடெல்லி: இந்தியப் பெண்கள் பல துறைகளில் சாதனை படைக்கின்றனர். அவர்களின் பங்களிப்பு உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது என்று நரேந்திர மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இந்தியப் பெண் களைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். பெண்கள் சக்தி மூலம், நாட்டிலும் சமூகத்திலும் நேர்மறையான மாற் றங்கள் வந்திருப்பதாகக் கூறி னார். ஒவ்வொரு மாதமும் வானொலி மூலமாக மக்களிடையே பிரதமர் மோடி 'மன் கி பாத்' எனும் நிகழ்ச்சியில் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடையே உரையாற்றினார்.
அதில் அவர், "குடியரசு தினத்தில் 10 ஆசியான் நாடு களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக 10 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். "உலகத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் கல்பனா சாவ்லா முன்மாதிரியாக விளங்குகிறார். பெண்கள் பல துறைகளில் முன்னேற்றம் அடைந் துள்ளனர். தலைவர்களாகவும் உருவெடுத்து வருகின்றனர். ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. "விமானப் படையைச் சேர்ந்த பாவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி ஆகியோர் சுகோய் 30 போர் விமானத்தில் பறக்க பயிற்சி பெற்று வருகின்றனர். அனைத்து உயர் அதிகாரிகளும் பெண்கள்தான். இது பாராட்டுக்குரியது.

