ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியை அடுத்த நெடுங்குளத்தில், ஊர் மக்கள் சார்பில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஜல்லிக்கட்டில் 300 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் சீறிப்பாய்ந்து வீரர்களைத் திக்குமுக்காடச் செய்தன. 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். காளைகள் குத்தியதில் இருபதுக்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகளை அடக்கியவர்களுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப் பட்டன. படம்: தமிழக தகவல் ஊடகம்
ஜல்லிக்கட்டு நீடிப்பதால் மாடுபிடி வீரர்கள் உற்சாகம்
1 mins read
-

