வரும் நிதியாண்டில் இந்தியப் பொருளியல் 7 % முதல் 7.5 % வரை வளரும் என்று முன் னுரைக்கப்பட்டுள்ளது. பொரு ளியல் வளர்ச்சி என்றழைக்கப் படும் மொத்த உள்நாட்டு உற் பத்தி வரும் ஏப்ரல் 1 முதல் வேகமெடுக்கும் என்று இந் திய நாடா-ளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பொருளியல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாட்டின் நிதி நில வரம் நல்ல நிலைமையில் முன் னேறுவதை அந்த அறிக்கை உணர்த்துகிறது.
கடந்த ஆண்டில் மேற் கொள்ளப்பட்ட பல்வேறு சீர் திருத்த நடவடிக்கைகளின் பல னால் அடுத்த நிதி ஆண்டில் பொருளியல் வளர்ச்சி அதி கரிக்கும் என்றும் உலகளவில் வேகமாக பொருளியல் வளர்ச்சி கண்டுவரும் நாடு என்பதை இந்தியா தக்கவைத்துக்கொள் ளும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கி சீர்திருத்த நடவடிக்கைகள், அந்நிய நேரடி முதலீடுகளிலி ருந்த கெடுபிடி நீக்கம், ஜிஎஸ்டி அறிமுகம் போன்றவை அந்த சீர்திருத்த நடவடிக்கைகள்.

