பட எட்டுப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பல கோடி ரூபாய் சுருட்டிய பலே ஆசாமியை காவல்துறையினர் கைது செய்துள் ளனர். கோவை வெள்ளலூரைச் சேர்ந்த 57 வயது புருசோத்தமன் என்பவர் தனது மனைவி இறந்து விட்டதால் இரண்டாவது திரு மணம் செய்து கொள்வதாகக் கூறி பலரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் கட்டுக்கதைகளைக் கூறி அவர்களிடமிருந்து பல கோடி ரூபாயை புருசோத்தமன் பெற்றுள்ளார்.
தொழில் அதிபர் எனக் கூறி கோவையில் உள்ள மெட்டிஒலி என்ற திருமணத் தகவல் மையத் தில் அவர் தமது பெயரை பதிவு செய்தார். இதனையடுத்து திருமணத் தகவல் மையம் மூலமாக தெரிய வந்த குமுதவள்ளி, 45, என்பவரை அவர் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே தொழிலில் நட்டம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி குமுத வள்ளியிடம் இருந்து அவர் ரூ.3 கோடி பெற்றார். அதன் பின்னர் அவருடன் குமுதவள்ளி குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த குமுதவள்ளி, புருசோத்தமன் குறித்து விசாரித்தார். அப்போது புருசோத்தமன் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பேராசிரியை இந்திரா காந்தி, ஈரோட்டைச் சேர்ந்த சித்ரா உட்பட எட்டுப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த விவரம் தெரியவந்தது.
இத்தனை மோசடிகளுக்கும் புருசோத்தமனின் மகள் கீதாஞ்சலி உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்த கோவை மகளிர் காவல்துறையினர் இதற்கு உடந் தையாக இருந்த திருமணத் தகவல் மைய நிர்வாகிகள் மோகனன், 65, வனஜா குமாரி, 53, ஆகியோரை கைது செய்து தலைமறைவாக இருந்த புரு சோத்தமனை தேடி வந்தனர். இதற்கிடையே காவல்துறையின ரிடம் புருசோத்தமன் சிக்கினார். அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

