சென்னை: பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுக தலைமையில் எதிர்க் கட்சிகள் ஒன்றுகூடி மாபெரும் மறியல் போராட்டங்களில் ஈடு பட்டன. இந்த மறியல் போராட்டத்தில் திமுகவுடன் சேர்ந்து காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளும் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டன.
இம்மாதம் 19ஆம் தேதி தமிழக அரசு உள்ளூர், வெளியூர் அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியது. இதையடுத்து கட்டண உயர்வு 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது, தமிழகம் முழுவதும் மாணவர்களையும் சாலையில் இறங்கிப் போராட வைத்தது. திமுக உட்பட எதிர்க்கட்சிகள் தனித்தனியாக ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ள நிலையில் நேற்று கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றி யங்கள் அளவில் மறியல் போராட் டங்கள் நடைபெற்றன.
கொளத்தூரில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: தமிழக ஊடகம்

