நீதிமன்றத்தில் குறுந்தகவல் அனுப்பிய நித்யானந்தா சீடரிடம் விசாரணை

நீதிமன்றத்தில் குறுந்தகவல் அனுப்பிய நித்யானந்தா சீடரிடம் விசாரணை

1 mins read

சென்னை: மதுரை ஆதீனத்தை நித்யானந்தா சாமி கைப்பற்ற முயற்சி செய்ததாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன்னி லையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப் படாததால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசார ணையைப் பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையே வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் இருந்த நித்யானந்தாவின் சீடர் நரேந்திரன், வழக்கு விவரங்களை உடனுக்குடன் குறுந்தகவல் மூலம் யாருக்கோ தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தார். இது நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் நரேந்திரனின் கைத்தொலைபேசியை வாங்கி பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் இருந்தபடி யாருக்காவது குறுந்தகவல் அனுப்பியிருந்தால் அவரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.