ஆலந்தூர்: சென்னை விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு முனையத்தின் 2வது நுழைவு வாயில் அருகே நேற்று காலை கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. பயணிகள் யாரும் பையை எடுக்காததால் அதன் மீது சந் தேகம் ஏற்பட்டது. வெடிகுண்டு இருக்கலாம் என்றும் பயணிகளி டையே தகவல் பரவியது. இதனால் விமான நிலையத் துக்கு வந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதற்கிடையே இது குறித்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு கவசம் அணிந்துவந்த வெடி குண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள், மர்ம பையைப் பாதுகாப்பாக எடுத்துச் சோதனை செய்தனர். ஆனால் அதில் பழைய துணிகள் மட்டும் இருந்தன. இதனால் பாது காப்பு அதிகாரிகளிடையே நிம்மதி ஏற்பட்டது. விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் இந்தத் துணிப் பையை விட்டுச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் மர்ம பையின் சொந்தக்காரர் யார் என்பது குறித்து விமான நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

