அரசுப் பேருந்தில் விஜயகாந்த் பயணம்; தொண்டர்களுக்கும் டிக்கெட் வாங்கினார்

அரசுப் பேருந்தில் விஜயகாந்த் பயணம்; தொண்டர்களுக்கும் டிக்கெட் வாங்கினார்

1 mins read
20020b84-0ff8-4bec-b8ae-4a7005ee8c9b
-

சென்னை: தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார் பில் நேற்று பல்லாவரத்தில் நடை பெற்ற போராட்டத்தில் அக்கட்சி யின் தலைவர் விஜயகாந்த் பங் கேற்றார். அப்போது கட்டண உயர்வுக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கேப்டன் விஜய காந்த் அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்தார். ஆலந்தூரிலிருந்து திரிசூலத் துக்குப் பயணம் செய்த அவர் தனது சட்டை பையிலிருந்து 500 ரூபாய் கொடுத்து தொண்டர்களுக் கும் சேர்த்து 'டிக்கெட்' எடுத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய விஜயகாந்த், "தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மதுரைக் குப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் ரூ.700 கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டு செல்வதற்குப் பதில் நான் ரூ.500 அபராதம் செலுத்தி விட்டுச் செல்கின்றேன் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை," என்றார்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக சாலை மறியல், ரயில் மறியலில் ஈடுபடாமல் கண்டன ஆர்ப்பாட் டத்தை நடத்துவதாகவும் அவர் சொன்னார்.

தேமுதிக தொண்டர்களுடன் அரசுப் பேருந்தில் பயணம் செய்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். படம்: தமிழக ஊடகம்