சென்னை: சென்னை காற்றின் தரம் எண்பது விழுக்காடு நேரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று கண்காணிப்புக் கருவி மூலம் கண்டறியப்பட்டுள் ளது. சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் மனித நுரையீரல் பராமரிப்பு அறநிறுவனம், சுகாதார-எரி சக்தி, மும்பையைத் தளமாகக் கொண்ட நகர அறிவியல் ஆகிய அமைப்புகள் குறைந்த செலவில் காற் றின் தரத்தைக் கண்காணிக் கும் சாதனத்தை நகரத்தின் ஐந்து இடங்களில் நிறுவியுள் ளன.
இதன் மூலம் ஜனவரி 1ஆம் தேதிக்கும் ஜனவரி 23ஆம் தேதிக்கும் இடையே பதிவான புள்ளிவிவரங்கள் அலசி ஆராயப் பட்டன. அதில் கொடுங்கையூர், எண்ணூர் முதல் நந்தனம் வரை காற்றின் தரம் எண்பது விழுக் காடு நேரத்துக்கு மேல் ஆரோக் கியமற்ற நிலையிலிருந்து அபாய கரமான நிலை வரை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்டாம்ஸ் ரோட்டில் காற்றின் தரம் நல்ல நிலையில் உள்ளது என்று நுரையீரல் பராமரிப்பு அறநிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் அரவிந்த குமார் சொன்னார். முன்னணி நுரையீரல் சிகிச்சை நிபுணரான டாக்டர் ஹிஷாமுதீன் பாபா, தேனாம் பேட்டையில் தனது மருத்துவ மனையில் மலிவான விலையில் காற்றின் தரத்தைக் கண்காணிக் கும் கருவியை நிறுவியுள்ளார். மற்றவர்களும் 15,000 ரூபாய் செலவில் எளிய முறையில் செயல்படும் கண்காணிப்புக் கரு வியை நிறுவலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

