புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் மாட்டு வண்டி ஊர்வலம் நடந்தது. புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை அருகில் இருந்து மாட்டு வண்டி ஊர்வலம் புறப் பட்டது. ஊர்வலத்தை முதல் -அமைச் சர் நாராயணசாமி தொடங்கி வைத்து மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றார். போராட்டத்திற்கு மாநில இளை ஞர் காங்கிரஸ் தலைவர் இளைய ராஜா தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி, காங் கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம், தனுசு, கரு ணாநிதி மற்றும் மாநில, மாவட்ட, வட்டார மற்றும் இளைஞர் காங் கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டு வண்டியில் வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. படம்: எம்.சாம்ராஜ்

