புதுக் கட்சி தொடங்கும் தினகரன்

புதுக் கட்சி தொடங்கும் தினகரன்

1 mins read

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதிக் குள் டிடிவி தினகரன் 'அதிமுக அம்மா அணி' என்ற பெயரில் புதுக் கட்சியைத் தொடங்குவார் என்று அவரது ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித் துள்ளார். ஜெயலலிதா மறைவையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணியாகவும் சசிகலாவுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் தலைமையில் இன் னோர் அணியாகவும் அதிமுக பிரிந்து கிடக்கிறது.

பழனிசாமியை முதல்வர் பதவி யிலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தி ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் உட்பட தினகரன் ஆதரவு எம்எல் ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின் நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை யாகப் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினரானார் தினகரன். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்தபோதும் பழனிசாமி அணியால் இடைத் தேர்தலில் வெல்ல முடியவில்லை.

இதைத் தொடர்ந்து, தினகர னுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் அதிமுக நிர்வாகிகள் நீக் கப்படுவதாக அறிவிப்பு வெளி யாவது வாடிக்கையாகிவிட்டது.