'நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது'

'நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது'

1 mins read

புதுச்சேரி: காந்தியின் நினைவு நாள் காங்கிரஸ் கட்சி அலு வல கத்தில் நேற்று கடைபிடிக் கப் பட்டது. நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்-அமைச் சர் நாராயணசாமி கலந்துகொண்டு உரையாற்றி னார். அப்போது, "பாரதிய ஜனதா கட்சி அரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கைக்குப் பின், சரக்கு சேவை வரி, வேலையின்மை போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சி கண்டுள்ளது," என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, ஆட்சியைப் பிடித்தவுடன் மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை. "நேரு, பட்டேல் உள்ளிட்ட தலைவர்களை ஒருங்கி ணைத்து மகாத்மா காந்தி சுதந்திரம் பெற்றுத் தந்தார். அவரை கோட்சே சுட்டுக் கொன்றார். சுதந்திரத் திற்காக உயிர்த் தியாகம் செய்தது காங்கிரஸ். "சுதந்திரம் வேண்டாம் என்று நீதிமன்றத்தில் பிரமா ணப் பத் திரம் தாக்கல் செய் தவர்கள் இப்போது நாட்டை ஆளுகிறார்கள்," என்று பாஜக அரசை அவர் சாடினார்.