பாஜக மீது யஷ்வந்த் அதிருப்தி

பாஜக மீது யஷ்வந்த் அதிருப்தி

1 mins read
30a52409-62a9-4afd-8113-30125a10c7b4
-

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சித் தலைமை மீது அதிருப்தி யில் இருந்த மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, 'ராஷ்டிர மஞ்ச்' என்ற பெயரில் புதிய அரசி யல் அமைப்பை தொடங்கியுள் ளார். இந்த அமைப்பில் பாஜக நாடாளு மன்ற உறுப்பினரும் நடி கரு மான சத்ருஹன் சின்ஹா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இதுகுறித்து யஷ்வந்த் சின்ஹா கூறும்போது, "மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்தே இந்த அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இது பாஜகவுக்கு எதிரானது அல்ல.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி இந்த மண்ணில் சுடப்பட்டபோது என்ன நிலை இருந்ததோ அதே நிலைதான் இப்போதும் உள்ளது. இப்போது ஜனநாயகத்தின் மீது தாக்குதல் அதிகமாக உள்ளது. எங்களது அமைப்பு எந்தக் கட்சிக்கும் எதிரானது அல்ல. பாஜக தலை வர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். ஆனால் நாங்கள் அஞ்சவில்லை," என்றார். சத்ருஹன் சின்ஹா கூறும் போது, "பாஜகவில் என்னுடைய கருத்துகளைச் சொல்ல வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் தான் இந்த அமைப்பில் இணைந் தேன். இந்த அமைப்பின் மூலம் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச் சினைகளுக்குத் தீர்வு காணப் படும்," என்றார்.