திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்கு ஒருவரே பல தடவை சென்று வழிபடுவதால் புதியவர் களுக்கு வழிவிடும் விதமாக கட்டுப்பாடுகளை விதிக்க ஆந் திர மாநில அரசாங்கம் யோசித்து வருகிறது. இது குறித்து பொது மக்களிடம் கருத்துகள் திரட்டப் படும் என்று அம்மாநிலத்தின் இந்து அறநிலையத்துறை அமைச் சர் பி.மணிக்கயால ராவ் தெரி வித்துள்ளார். பக்தர்களும் ஊடகங்களும் இதுகுறித்து தங்களது யோசனை களைத் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
"ஏழுமலையானைத் தரிசிக்க நாள் ஒன்றுக்கு 70,000 பேர் வருகிறார்கள். ஒருவர் ஒரு மாதத் திலேயே பல தடவை வந்து போகிறார். அதனால் ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற் காக இணையம் மூலமான அனு மதியில் அதிக மாற்றங்கள் செய் யப்படும். "ஆதார் எண்ணை அடிப்படை யாக வைத்து கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும். ஒருமுறை தரிசனத்துக்கு வந்த வர் மறுமுறை வருவதற்கு இணை யம் மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும்.
"அவர் கேட்டிருக்கும் கால நேரத்தில் நிலவும் கூட்ட நெருக் கடியைப் பொறுத்து அதே ஆண் டில் இரண்டாவது தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்படும். அது தான் அதிகபட்சம். அதற்கு மேல் அவர் ஏழுமலையானை அதற்கு அடுத்த ஆண்டில்தான் தரிசிக்க முடியும். "முதல்முறை கோயிலுக்கு வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதன் மூலம் தரிசன வாய்ப்பு அனைவருக்கும் கிடைக் கும்," என்றார் அமைச்சர்.

