எம்எல்ஏவுடன் மோதியவர் திடீர் மரணம்; எம்எல்ஏ வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு

2 mins read

வேலூர்: அதிமுக எம்எல்ஏவுடன் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்ட மேடை அலங்காரக்காரர் நேற்று மரணமடைந்தார். இதையடுத்து அதிமுகவில் பலர் அதிர்ச்சியடைந்தனர். மேடை அலங்காரம் செய்யும் தொழிலாளியான திருவண்ணா மலை மாவட்டம் போளூர் அரசிங் தெருவைச் சேர்ந்த வசந்தமணி என்கிற மணிகண்டன், 41, கலச பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங் காரம் செய்து வந்தார். இந்த நிலையில் எம்எல்ஏ அவருக்கு ரூ.20,000 பணம் தர வேண்டியிருந்தது.

இந்தப் பணத்தைப் பற்றி வசந்தமணி எம்எல்ஏவிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டது. கடந்த மாதம் 21ஆம் தேதி இரவு வசந்தமணி பணத்தைக் கேட்பதற்காக போளூர் வசந்தம் நகரில் உள்ள பன்னீர்செல்வம் எம்எல்ஏ வீட்டுக்குச் சென்றார். அங்கு எம்எல்ஏ இல்லாததால் ஆத்திரமடைந்த வசந்தமணி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தார்.

அதன் பிறகு போளூரில் உள்ள அதிமுக பிர முகர் இல்லத் திரு மண நிகழ்ச் சிக்கு பன்னீர்செல்வம் எம்எல்ஏ சென்றதை அறிந்து அவர் அங்கு சென்றார். அப்போது வசந்தமணி ஆசி பெறுவதுபோல் காலில் விழுந்து எம்எல்ஏவின் இரு கால்களையும் வாரி கீழே தள்ளினார். பின்னர் தடுமாறி விழுந்த பன்னீர்செல்வத் தின் முகத்தில் அவர் குத்தினார். இதில் வசந்தமணி கையி லிருந்த மோதிரம் அவரது உதட்டைக் கிழித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் வசந்தமணியைத் தாக்கினர்.

இதையடுத்து எம்எல்ஏவைத் தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வசந்தமணி சிறை யில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த மாதம் 23ஆம் தேதி இரவு வசந்தமணிக்கு சிறுநீர் ரத்தம் கலந்து வெளி யேறியது. இதனால் வேலூர் அடுக் கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இரண்டு நாள் கழித்து மீண்டும் அவர் வேலூர் சிறையில் அடைக் கப்பட்டார்.

ஆனால் மறுநாள் 26ஆம் தேதி காலை அவருக்கு மயக்கம் ஏற் பட்டதாகக் கூறப்படுகிறது. உடனே சிறை அதிகாரிகள் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அப்போது அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக மருத்து வர்கள் கூறினர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.

பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சுயநினைவின்றிக் கிடந்த வசந்தமணியின் உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோச மானது. இந்தச் சூழ்நிலையில் நேற்று அதிகாலை வசந்தமணி பரிதாபமாக இறந்தார். இதனை அறிந்த வசந்த மணியின் உறவினர்களும் நண்பர் களும் போளூரில் உள்ள எம்எல்ஏ வீட்டு முன்பு திரண்டனர்.