இந்திய வரவுசெலவுத் திட்டம்: கிராமப்புற வாக்காளர்களை ஈர்க்கும் விதத்தில் பல சலுகைகள் அறிவிப்பு

1 mins read
602b343f-7dea-42fb-b468-0425824193e8
-

விவசாயம், சுகாதாரம், கிராமப்புற பொருளியல் ஆகியவற்றின் மேம் பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக் கும் விதத்தில் 2018-19க்கான வரவுசெலவுத் திட்டத்தை இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். விவசாய வருமானம் குறைந் திருப்பதும் இளையர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்திருப் பதும் கிராமப்புறங்களில் வசிப் போரிடையே அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது. அவர்களின் அதிருப்தியைப் போக்கி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் வரவு செலவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு அதிக உதவி வழங்கியதுடன், வீடுகள், கழிவறைகள், சாலைகள் கட்டு வதற்கான திட்டங்களையும் திரு ஜெட்லி அறிவித்தார்.

கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தி விவசாயிகளுக்கு உதவுவதற்கும் விவசாயக் கழிவுப் பொருட்களை எரிக்காமல் வேறு வழிகளின் பயன்படுத்துவதற்கான மாற்று வழிகளுக்கும் $288 பில்லியன் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன வசதி இல்லாத இடங்களில் நிலத்தடி நீரை சூரிய மின்சக்தி மூலம் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.