ராமநாதபுரம்: பாக் நீரினைப் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் முழுமையாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கு மாறும் வரை கச்சத்தீவு ஒப்பந்தப்படி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்திருந்தார். நிர்மலா சீத்தாராமன். அப்போது மீனவர்கள் அவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் இலங்கை கடற்படையி னரால் பிடித்து வைக்கப்பட் டுள்ள அனைத்து மீனவர்களையும் படகு களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் வலியுறுத் தப்பட்டு இருந்தது.
கச்சத்தீவில் மீன்பிடிக்க மீனவர்கள் கோரிக்கை
1 mins read

