சென்னை: மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சி மதவெறியை ஊக்கப்படுத்தி வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு குற்றம்சாட்டி உள்ளார். இத்தகைய போக்கு நாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கும் என் றும் அவர் கவலை தெரிவித் துள்ளார்.
மகாத்மா காந்தியின் 70ஆவது நினைவு தினத்தையொட்டி சென் னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் நல்லக்கண்ணு. அப்போது, பார திய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசை எதிர்ப்பதில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயக கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். மகாத்மா காந்தியின் பெருமைகளையும் அவர் பட்டியலிட்டார். சாதாரண மனிதரைப் போல சிந்தித்த காந்திஜி பெரிய மகானைப் போல் செயல்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், சுமார் 6 ஆயிரம் சாதிகள், ஏராளமான மதங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மொழி பேசுபவர்கள் நிறைந்த ஒரு நாட்டை கட்டமைத்ததில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது எனப் புகழ்ந்துரைத்தார்.
"சாதாரண மனிதராகப் பிறந்து சாதனையாளராக வாழ்ந்து மறைந்தவர் காந்தி. காந்திஜியுடன் மாறுபட்ட கருத்து கொண்டிருந்த பெரியார், அவர் மறைந்தபோது இந்நாட்டுக்கு காந்திதேசம் என பெயரிட வேண்டும் எனக் கூறினார்.
"அதேபோல அம்பேத்கருடன் கருத்து மோதல்கள் இருந்தாலும் இந்திய அரசியல் சட்டத்தை உரு வாக்கிய குழுவுக்கு தலைவராக அம்பேத்கரை நியமனம் செய்யக் காரணமாக இருந்தவர் காந்தியடி கள்," என நல்லக்கண்ணு வரலாற்றுச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டினார்.

